Passt nicht? Macht nichts! Sie können Artikel bis zu 30 Tage zurückgeben
Mit einem Geschenkgutschein können Sie nichts falsch machen. Der Beschenkte kann sich im Tausch gegen einen Geschenkgutschein etwas aus unserem Sortiment aussuchen.
Bis zu 30 Tage Rückgaberecht
இந்தத் தொடருக்காகத் தேடித் தேடி பெண் இயக்குநர்களின் படங்களைப் பார்த்தபோது இவர்கள் அனைவரின் இலக்கும் படைப்பின் வழியே ஒன்றையே கோரி நிற்பதை உணர முடிந்தது. அது சகமனிதர்களின் மீதான கருணை.
சீனா, இந்தியா, பிரெஞ்சு, ஜப்பான், ஈரான், நியூசிலாந்து, அமெரிக்கா, துருக்கி என வாழ்கின்ற தேசங்கள் வெவ்வேறானதாய் இருந்தாலும், இவர்கள் அனைவருமே ஒரே உடலின் பல முகங்களாகவே இருக்கின்றனர்.
தீவிர இலக்கிய வாசிப்பு, உறுதியான பெண் கதாபாத்திரங்கள், வாழும் சூழல் மற்றும் நிலவியல் குறித்த பார்வை, வரலாற்றின் மேல் கொண்டிருக்கிற ஈர்ப்பு, ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் குறித்த புரிதல் கொண்டே இவர்கள் படைப்பை கையாள்கின்றனர்.
அதோடு தொடர்ந்து இயங்குவதில் இவர்கள் கொண்டிருக்கிற பேரார்வமும் ஆச்சரியப்படவைப்பது, அந்தத் தொடர் உழைப்பு நமக்கு முக்கியமான தேவையும் கூட. திரைப்பட இயக்கங்களுக்கு இடையில் ஆவணப்படங்களும், குறும்படங்களும், தொலைக்காட்சிகளுக்காக இயக்குகிற தொடர்களும் என இவர்களின் படைப்பாற்றல் தொடர்ந்தபடி இருக்கிறது. இந்தப் புத்தகம் பெண் இயக்குநர்கள் பற்றிய ஒரு ஆரம்பப் பகிர்வு. படைப்பின் வழி மட்டுமே இவர்களை ஆழ அறிய முடியும்.
- ஜா.தீபா
Hallo! Ich bin Libroamiko, dein Buchberater.
Wie kann ich dir helfen?